டி20 உலகக்கோப்பை: மழை காரணமாக டாஸ் நிகழ்வு தாமதம்!

T20 World Cup 2022: Toss has been delayed due to rain!
டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும், அயர்லாந்து அணியும் மோதுகின்றன.
மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி தற்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. மழை நின்ற பிறகு டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளும் இதே மைதானத்தில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News