TNPL 2024: சச்சின், சுரேஷ் அதிரடியில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது லைகா கோவை கிங்ஸ்!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நெல்லை அணிக்கு கேப்டன் அருண் கார்த்திக் - மொஹித் ஹரிஹரன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மொஹித் ஹரிஹரன் ஒரு ரன்…
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நெல்லை அணிக்கு கேப்டன் அருண் கார்த்திக் - மொஹித் ஹரிஹரன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மொஹித் ஹரிஹரன் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அருண் கார்த்திக்குடன் இணைந்த ஹரிஷ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.