வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டியானது செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இப்போட்டிக்கான இரு அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன்: பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கேசி கார்டி, ஷாய் ஹோப்(கே), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஜஸ்டின் க்ரீவ்ஸ், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், மார்க்வினோ மைண்ட்லி, குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ்
வங்கதேசம் பிளேயிங் லெவன்: தன்ஸித் ஹசன், சௌமியா சர்க்கார், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ்(கே), அபிஃப் ஹொசைன், மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், ஷோரிபுல் இஸ்லாம், நஹித் ராணா.