
IPL 2021: Delhi Capitals (DC) Squad, Schedule, Updated Time And Venue (Image Source: Google)
கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் அமீரகத்தில் மீண்டும் தொடங்கவுள்ளது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
அந்தவகையில் நடப்பு சீசன் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
காரணம் கடந்த சீசன் ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால், கோப்பையை வெல்ல முடியவில்லை. அதனால் புது தெம்புடன் நடப்பு சீசனில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடி வருகிறது.