Advertisement

ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - மும்பை இந்தியன்ஸ் அணி ஓர் பார்வை!

நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

Advertisement
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - மும்பை இந்தியன்ஸ் அணி ஓர் பார்வை!
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - மும்பை இந்தியன்ஸ் அணி ஓர் பார்வை! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 11, 2024 • 08:41 PM

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கப்படவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாரகி வருகின்றன. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்டவுள்ளன. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.  இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 11, 2024 • 08:41 PM

இதில் ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக இருந்த ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சீசனில் கேப்டன் பதவியிலிருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன் பொறுப்பை வழங்கியுள்ளதால் அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அதன்படி நடப்பு சீசனில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

Trending

மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாக பார்க்கப்படுவது மும்பை இந்தியன்ஸ் அணி. சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், மஹீலா ஜெயவர்தனே, லசித் மலிங்கா, ஜாகீர் கான் போன்ற ஜாம்பாவன்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அணி ஆரம்ப காலங்களில் பெரிதளவில் சோபிக்க தவறினாலும், ரோஹித் சர்மாவின் தலைமைக்கு பின் அபாரமாக செயல்பட்டு 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது. அதிலும் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 6 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், அதில் ஒரு முறை மட்டுமே தோல்வியைத் தழுவியுள்ளது கவனிக்கத்தக்கது. ஆனால் கடைசி மூன்று சீசன்களில் இரண்டு முறை பிளே ஆஃப் சுற்றுக்குகூட மும்பை அணி முன்னேறமால் இருந்தது அந்த அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் தனது வெற்றி பாதைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துள்ளனர். 

மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம்

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த சில ஆண்டுகளில் அபாரமான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அந்த அணியின் பேட்டிங், பந்துவீச்சு வரிசையானது மற்ற அணிகளை காட்டிலும் மிகவும் வலிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம் பேட்டிங்கில் இந்திய நடத்திரங்கள் ரோஹித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோருடன் இந்த சீசனில் ஹர்திக் பாண்டியாவும் இணைந்துள்ளது அந்த அணிக்கு மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

காரணம் மும்பை இந்தியன்ஸ் அணியின் பெரும்பாலான நட்சத்திர வீரர்கள் இந்தியர்கள் என்பதால் அந்த அணிக்கு பிளேயிங் லெவனில் பேட்டிங் வரிசையில் பெரிதளவில் மாற்றங்களைச் சேய்யத்தேவையில்லை. இவர்களைத் தவிர்த்து வெளிநாட்டு வீரர்களில் டிம் டேவிட், முகமது நபி, டெவால்ட் ப்ரீவீஸ் மட்டுமே பேட்டர்களாக இடம்பெற்றுள்ளது அந்த அணியின் பிளேயிங் லெவனின் குழப்பத்தை ஏற்படுத்தது. மறுபக்கம் பந்துவீச்சாளர்களை எடுத்துக்கொண்டால் ஜஸ்ப்ரித் பும்ரா பந்துவீச்சு யுனிட்டை வழிநடத்துகிறது. 

சர்வதேச அளவில் முக்கிய பந்துவீச்சாளராக இருக்கும் பும்ரா இந்த சீசனில் விளையாடுவது அந்த அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அவருடன், ஜேசன் பெஹ்ரண்ட்ராஃப், ஜெரால்ட் கோட்ஸி, நுவான் துஷாரா, தில்ஷன் மதுஷங்கா, ஷம்ஸ் முலானி, நெஹால் வதேரே, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ரொமாரியோ செஃபெர்ட் ஆகியோரு இருப்பது அணிக்கும் கடப்பாறை பலத்தை கொடுத்துள்ளது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஜஸ்ப்ரித் பும்ரா தவிர்க்க முடியாத வீரராக இருப்பதால், மற்ற வீரர்களில் யார் யார் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார்கள் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் அணியின் பலவீனம்

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியதே அந்த அணியின் பெரும் பலவீனமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் மும்பை இந்தியன்ஸ் அணியைத் தாண்டியும் ரோஹித் சர்மாவிற்கான ரசிகர்கள் பட்டாளத்திற்கு இதுமிகப்பெரும் ஏமாற்றமாக இருந்தது. இதன் காரணமாக பெரும்பாலான ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூகவலைதள பக்கங்களை பின் தொடர்வதை நிறுத்தியது பெரும் அடியாக பார்க்கப்பட்டு வருகிறது. 

அதுபோக ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கடந்த இரு சீசன்களாக வழிநடத்தி அதில் இருமுறையும் இறுதிப்போட்டிக்கு ஹர்திக் பாண்டியா அழைத்துச்சென்றுள்ளார். ஆனாலும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள வீரர்களை எவ்வாறு வழிநடுத்துவார், அவரது கேப்டன்சி எவ்வாறு இருக்கும், சக வீரர்களுடன் எவ்வாறு ஒத்துழைப்பார் என்ற கேள்விகளும் மும்பை இந்தியன்ஸ் அணியை சூழந்துள்ளது. மேலும் அவருக்கும் ரோஹித்திற்குமான ஒத்துழைப்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க வேண்டும். 

இதுதவிர அணியின் மிடில் ஓவர்களில் மும்பை அணியின் பந்துவீச்சு எவ்வாறு இருக்கும் என்பது அந்த அணியின் பலவீனங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஜஸ்ப்ரித் புர்மா, ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் தொடக்கம் மற்றும் டெத் ஓவரில் அபாரமாக செயல்பட்டாலும், மிடில் ஓவர்களில் அந்த அணி எவ்வாறு எதிரணியை கட்டுப்படுத்தும் என்பது கேள்விக்குறிதான். ஹர்திக் பாண்டியா, பியூஷ் சாவ்லா போன்ற வீரர்கள் இருந்தாலும், அவர்கள் ரன்களை கட்டுப்படுத்த தவறுவார்கள் என்பது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்து என எதிர்பார்க்கப்படுகிறது. 

மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் வரலாறு

  • 2008 - லீக் சுற்று
  • 2009 - லீக் சுற்று
  • 2010 - இரண்டாம் இடம் (ரன்னர்-அப்)
  • 2011 - பிளே ஆஃப் சுற்று
  • 2012 - பிளே ஆஃப் சுற்று
  • 2013 - சாம்பியன்
  • 2014 - பிளே ஆஃப் சுற்று
  • 2015 - சாம்பியன்
  • 2016 - லீக் சுற்று
  • 2017 - சாம்பியன்
  • 2018 - லீக் சுற்று
  • 2019 - சாம்பியன்
  • 2020 - சாம்பியன்
  • 2021 - லீக் சுற்று
  • 2022 - லீக் சுற்று
  • 2023 - பிளே ஆஃப் சுற்று

மும்பை இந்தியன்ஸ் அணி

ரோஹித் சர்மா, டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, தில்ஷன் மதுஷங்கா, ஸ்ரேயாஸ் கோபால், நுவான் துஷாரா, நமன் திர், அன்ஷுல் கம்போஜ், முகமது நபி, ஷிவாலிக் சர்மா.

சிஎஸ்கே போட்டி அட்டவணை

இந்தியாவில் நடப்பு ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து இத்தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை மட்டும் பிசிசிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • மார்ச் 24 - குஜராத் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், அஹ்மதாபாத்
  • மார்ச் 27 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத்
  • ஏப்ரல் 01 - மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை
  • ஏப்ரல் 07 - மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement