‘கிங் ஆஃப் ஸிவிங்’ ஆண்டர்சன்னின் அசத்தலான சாதனை!
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 1000 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இவர் இங்கிலாந்து அணிக்காக இதுவரை 162 டெஸ்ட், 194 ஒருநாள், 19 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 617 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 239 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 18 விக்கெட்டுகள் என கைப்பற்றி மொத்த 904 சர்வதேச விக்கெட்டுகளை தான் பெயரில் வைத்துள்ளார்.
Trending
மேலும் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அதிக போட்டியில் விளையாடிவர் என்ற சாதனையையும், அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார்.
மேலும் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவின் (708) சாதனையை ஏற்கனவே முறியடித்த நிலையில் தற்போது இந்திய அணியின் அனில் கும்ளேவின் (619) சாதனையை நெருங்குகிறார். இவர் கும்ளேவின் சாதனையை முறியடிக்க இன்னும் 3 விக்கெட்டுகள் தேவை.
இந்நிலையில் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் 4ஆம் தேதி நாட்டிங்காம்மில் தொடங்குகின்றன. இப்போட்டியில் ஆண்டர்சன் , அனில் கும்ளேவின் சாதனையை முறியடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இவர் இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் லங்காஷயர் அணிக்காக விளையாடிவருகிறார். இதில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற லங்காஷயர் - கெண்ட் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆண்டர்சன் பங்கேற்றார்.
இப்போட்டியின் ஆரம்பம் முதலே அபாரமாக பந்துவீசிய ஆண்டசர்சன், ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆயிரமாவது விக்கெட்டை கைப்பற்றி வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். மேலும் அப்போட்டியில் 10 ஓவர்களை வீசிய ஆண்டர்சன் 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
WATCH: All seven of @jimmy9's wickets @EmiratesOT this afternoon!
— Lancashire Cricket (@lancscricket) July 5, 2021
An absolute exhibition.
#RedRoseTogether pic.twitter.com/uBImltdBYi
இதன் மூலம் முதல் தர போட்டிகளில் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 216ஆவது இடத்தையும், முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சதம் மற்றும் 1000 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் நபர் எனும் சாதனையும் படைத்துள்ளார்.
மேலும் இந்த நூற்றாண்டில் 1,000 முதல் தர விக்கெட்டுகளை எட்டிய 14 வது வீரராகவும், ஆண்டி கேடிக் (2005), மார்ட்டின் பிக்னெல் (2004 ), டெவன் மால்கம் (2002), மற்றும் வாசிம் அக்ரம் (2001) ஆகியோருக்குப் பிறகு முதல் தர கிரிக்கெட் போட்டியில் ஆயிரம் விக்கெட்டுகளை கைப்பற்றிய ஐந்தாவது வேகப்பந்துவீச்சாளராகவும் ஆண்டர்சன் சாதனை படைத்துள்ளார்.
அதேசமயம் மே 2002ஆம் ஆண்டில் அறிமுகமானதில் இருந்து ஆண்டர்சனை விட வேறு எந்த வீரரும் முதல் தர விக்கெட்டுகளைக் கைப்பற்றியதில்லை. இவருக்கு அடுத்த படியாக முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 856 விக்கெட்டுகளை கைப்பற்றி டிம் முர்டாக் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now