
Denmark Open 2022: Kidambi Srikanth Bows Out In Pre-Quarterfinals After Losing To Loh Kean Yew (Image Source: Google)
டென்மார்க் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் கிடாம்பி ஸ்ரீகாந்த், சிங்கப்பூரின் லோ கிங் யூவை எதிர்கொண்டார்.
இப்போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கிங் யூ முதல் செட்டை 21-13 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றி ஸ்ரீகாந்திற்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அதன்பின் இரண்டாம் செட் ஆட்டத்திலும் அபாரமாக செயல்பட்ட கிங் யூ 21-15 என்ற புள்ளிக்கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்ற, 21-13, 21-15 என்ற நேர் செட் கணக்கில் கிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி அசத்தினார்.