
Denmark Open: Lakshya, HS Prannoy advance to round of 16 (Image Source: Google)
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், இந்தோனேஷியாவின் அந்தோனி சினிசுகாவை எதிர்கொண்டார்.
பரபரப்பு நிறைந்த இப்போட்டியின் ஆரம்பம் முதலே லக்ஷ்யா சென் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-14 என்ற புள்ளிக்கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி சினிசுகாவிற்கு அதிர்ச்சியளித்தார்.
அதன்பின் நடைபெற்ற இரண்டாவது செட்டிற்கான ஆட்டத்திலும் அபாரமாக செயல்பட்ட லக்ஷ்யா சென் 21-12 என்ற புள்ளிக்கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றி அசத்தினார்.