
Denmark Open: Lakshya Sen loses in quarterfinals, Indian challenge ends (Image Source: Google)
டென்மார்க் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென், மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ் பிரனாயுடன் மோதினார்.
இந்த போட்டியில் லக்சயா சென், 21-9, 21-18 என்ற செட் கணக்கில் பிரனாயை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் லக்சயா சென் ஜப்பானின் கோடை நரோகாவுடன் மோதினார்.
இப்போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோடை நரோகா 21-17 என்ற கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றி லக்ஷயா சென்னிற்கு அதிர்ச்சியளித்தார்.