
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் குரூப் சி பிரிவில் அர்ஜென்டினா, சவூதி அரேபியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் சவூதி அரேபியா அணி, அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.
ஆட்டம் தொடங்கிய 10ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் லியோனல் மெஸ்ஸி முதல் கோலை அடித்தார். இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
பின்னர் சூடு பிடித்த ஆட்டத்தில் சவூதி அணி 48 வது நிமிடத்தில் ஒரு கோலும், 53வது நிமிடத்தில் மற்றொரு கோலும் அடித்து முன்னிலை பெற்றது. அர்ஜென்டினா அணி கடைசி வரை எவ்வளவோ முயன்றும் இரண்டாவது கோல் அடிக்க முடியவில்லை.