
Kidambi Srikanth, Treesa Jolly-Gayatri Gopichand Enter Second Round Of Denmark Open (Image Source: Google)
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நேற்று தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் என்ஜி கா லாங் அங்கஸை எதிர்கொண்டார்.
இப்போட்டியின் முதல் செட்டை அங்கஸ் 21-17 என்ற கணக்கில் கைப்பற்ற, அதன்பின் சூதாரித்து விளையாடிய கிடாம்பி ஸ்ரீகாந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது செட்டை 21 -14 என்ற கணக்கில் கைப்பற்றி அச்த்தினார்.
அதன்பின் போட்டியின் வெற்றியாளாரைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டிற்கான ஆட்டத்திலும் அபாரமாக செயல்பட்ட கிடாம்பி 21 - 12 என்ற புள்ளிகணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றி அசத்தினார்.