
PKL 2022: Gujarat Giants beat U mumba bu 38-36! (Image Source: Google)
புரோ கபடி லீக் ஆட்டத்தின் ஒன்பதாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் யு மும்பா - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஏற்கெனவே இந்த இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கான ரேஸில் இருந்து வெளியெறி விட்ட நிலையில் இப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டி தொடங்கியது முதலே இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை கைப்பற்றி வெற்றிக்காக போராடின. ஒரு கட்டத்திற்கு மேல் இரு அணிகளும் சமபலத்துடன் புள்ளிகளைப் பெற்றாதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
ஆட்டத்தின் இறுதியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 38 - 36 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பாவை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது. குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் பார்தீக் தாஹியா 13 புள்ளிகளைப் பெற்று அணியின் வெற்றிக்கு உதவினார்.