Advertisement

PKL 2023: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் ஆசத்தல் வெற்றி!

தெலுங்கு டைட்டன்ஸுக்கு எதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 6 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan December 02, 2023 • 21:54 PM
PKL 2023: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் ஆசத்தல் வெற்றி!
PKL 2023: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் ஆசத்தல் வெற்றி! (Image Source: Google)

புரோ கபடி லீக்கின் 10ஆவது சீசன் போட்டிகள் அஹ்மதாபாத்தில் உள்ள டிரான்ஸ் ஸ்டேடியா மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 12 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

அதன்படி போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் சமபலத்தை வெளிப்படுத்தி மாறி மாறி புள்ளிகளைப் பெற்றன. இருப்பினும் இப்போட்டியின் முதல் பாதி ஆட்டநேர முடிவில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 16 -14 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

அதன்பின் இரண்டாம் பாதி ஆட்டத்தின் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட குஜராத் ஜெயண்ட்ஸ் அணி அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்று டைட்டன்ஸ் அணியை ஆல் அவுட்டாக்கியது. பின் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டைட்டன்ஸ் அணியும் புள்ளிகளைப் பெற இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் எகிறியது. 

இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 38 - 32 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. குஜராத் ஜெயண்ட் அணி தரப்பில் சோனு ஜக்லான் 11 ரைட் புள்ளிகளைப் பெற்று அணியின் வெற்றிக்கு உதவினார். 


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement