-mdl.jpg)
PKL 9: Guman Singh, Heidarali Ekrami help U Mumba to a massive victory against Gujarat Giants (Image Source: Google)
12 அணிகள் இடையேயான 9ஆவது சீசன் புரோ கபடி போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் யு மும்பா- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியின் தொடக்கம் முதலே யு மும்பா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளைப் பெற்று அசத்தியது. அதிலும் யு மும்பா அணியில் குமன் சிங் தனது அட்டகாசமான ரெய்டிகளின் மூலம் அணியின் புள்ளிகளை உயர்த்தினார்.
மறுமுனையில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் தங்ளால் முடிந்த அளவு போராடி புள்ளிகளைச் சேர்த்தது. இருப்பினும் ஆட்டநேர முடிவில் யு மும்பா அணி 37 - 29 புள்ளிகள் என்ற கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பெற்றது.