
PKL 9: Maninder Singh, Shrikant Jadhav lead Bengal Warriors to big over Gujarat Giants (Image Source: Google)
12 அணிகளுக்கு இடையிலான 9ஆவது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது.
இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 46-27 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பெங்கால் வாரியர்ஸ் அணி 37 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளின் 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 31 புள்ளிகளுடன் 10ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.