-mdl.jpg)
PKL 9: Maninder Singh's fabulous performance leads Bengal Warriors to victory over Gujarat Giants (Image Source: Google)
புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் 41 போட்டிகள் பெங்களூருவில் நடந்த நிலையில், அடுத்த போட்டிகள் புனேவில் நடந்துவருகின்றன. இன்று நடந்த முதல் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸும் பெங்கால் வாரியர்ஸும் மோதின.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் கடுமையாக போட்டியிட்டன. இதில் இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடி புள்ளிகளை பெற்றன. கடைசியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 45- 40 என்ற கணக்கில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
பெங்கால் அணி தரப்பில் மனிந்தர் சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 12 ரெய்ட் புள்ளிகள் மற்றும் 8 போனஸ் புள்ளிகளைப் பெற்று 20 புள்ளிகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.