
PKL 9: Manjeet Stars as Haryana Steelers Earn Thrilling Win Over Gujarat Giants (Image Source: Google)
12 அணிகளுக்கு இடையிலான 9ஆவது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடர் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது.
இந்த நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் - ஹரியான ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகாளும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளைப் பெற்றது.
மிகவும் பரபரப்பாக நடைபெற்று முடிந்த இப்போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 33 - 32 என்ற புள்ளிகணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.