
PKL 9: Pardeep Narwal gets his 1500th raid point as U.P. Yoddhas eke out narrow win (Image Source: Google)
ஒன்பதாவது சீசன் புரோ கபடி லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 35-30 என்ற புள்ளிகணக்கில் பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தரப்பில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நரேந்தர் 13 புள்ளிகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் யுபி யோதாஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த, இதில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்தன.