Advertisement

PKL 2022: டிராவில் முடிந்த ஜெய்ப்பூர் - குஜராத் ஆட்டம்!

புரோ கபடி லீக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான போட்டி 51-51 என டிரா ஆனது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan December 09, 2022 • 22:08 PM
PKL 9: Sonu's Super 10 Helps Gujarat Giants Tie Match With Jaipur Pink Panthers 51-51
PKL 9: Sonu's Super 10 Helps Gujarat Giants Tie Match With Jaipur Pink Panthers 51-51 (Image Source: Google)

புரோ கபடி லீக்கின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், பெங்களூரு புல்ஸ், யு.பி யோதாஸ் அணிகள் முதல் 4 அணிகளாக பிளே ஆஃபிற்கு முன்னேறின.

இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் தோல்விகளை தழுவிய தமிழ் தலைவாஸ் அணி, அதன்பின்னர் வெகுண்டெழுந்து அபாரமாக விளையாடி  தொடர் வெற்றிகளை பெற்று பிளே ஆஃபிற்கு முன்னேறியது. அதேபோலவே இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் வெற்றிகளை பெற்று, பின்னர் தோல்விகளை தழுவிய டபாங் டெல்லி அணி, கடைசியில் சில வெற்றிகளை பெற்று பிளே ஆஃபிற்கு முன்னேறியது.

ஏற்கனவே பிளே ஆஃபிற்கு முன்னேறிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி இன்றைய போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டி தொடக்கம் முதலே சிறப்பாக இருந்தது. இரு அணிகளும் மிகச்சிறப்பாக விளையாடி புள்ளிகளை குவித்தன. இரு அணிகளும் வெற்றி வேட்கையுடன் வெறித்தனமாக விளையாடின.

இரு அணிகளும் ஆட்டத்தின் எந்த சூழலிலும் பின் தங்கவில்லை. மாறி மாறி புள்ளிகளை குவிக்க, பரபரப்பாக இருந்த இந்த ஆட்டம் கடைசியில் 51-51 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இதில் ஜெய்பூர் அணி தரப்பில் அர்ஜுன் தேஷ்வால் 17 புள்ளிகளையும், குஜராத் அணி தரப்பில் சோனு ஜக்லன் 14 புள்ளிகளையும் கைப்பற்றினர்.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement