Advertisement

PKL 2022: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்!

தெலுங்கு டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 44 - 30 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்றது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan December 07, 2022 • 09:50 AM
PKL: Parteek Dahiya's 17-point Game Powers Giants To Huge Win Over Telugu Titans, Keeps Them In Cont
PKL: Parteek Dahiya's 17-point Game Powers Giants To Huge Win Over Telugu Titans, Keeps Them In Cont (Image Source: Google)

புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள் முதல் 2 அணிகளாக பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டன. அதேபோல் பெங்களூரு புல்ஸ், யுபி யோதாஸ் அணிகளும் தங்களது இடங்களை உறுதிசெய்துள்ளன.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி - யு மும்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் தபாங் டெல்லி அணி 41 - 24 என்ற புள்ளிகணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி தொடர்ந்து 6ஆவது இடத்தை தக்கவைத்தது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

அதன்படி தொடக்கம் முதலே குஜராத் ஜெயண்ட்ஸ் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்றது. இதனால் ஆட்டநேர முடிவில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 44 - 30 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 56 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் நீடித்து வருகிறது. ஒருவேளை தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி அணிகள் அடுத்தடுத்து போட்டிகளில் தோல்வியடைந்தால் குஜராஜ் ஜெயண்ட்ஸ் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் தமிழ் தலைவாஸ் அணி இன்றைய போட்டியில் யுபி யோதாஸை வீழ்த்தினால் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement