alana king
அலனா கிங் அபார பந்துவீச்சு; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை லீக் போட்டி இந்தூரில் உள்ள ஓல்கார் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கைத் தேர்வு செய்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய வோல்வார்ட் 7 பவுண்டரிகளுடன் 31 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து தஸ்மின் பிரிட்ஸ் 6 ரன்னிலும், சுனே லூஸ் 6 ரன்னிலும், அன்னேரி டெர்க்சன் 5 ரன்னிலும், மரிஸான் கேப் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அவர்களைத் தொட்ர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளில் சினோலா ஜாஃப்டா 29 ரன்களையும், நதின் டி கிளார்க் 14 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் வந்த வேகத்தில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 24 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்களில் ஆல் அவுட்டானது.
Related Cricket News on alana king
-
பெத் மூனி, அலனா கிங் அசத்தல்; பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: பிப்ரவரி மாதத்திற்கான விருதை வென்றார் ஷுப்மன் கில்!
பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை இந்திய அணியின் ஷுப்மன் கில்லும், சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலிய அணியின் அலானா கிங்கும் வென்றுள்ளனர். ...
-
மாதாந்திர விருதுகள்: பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை பரிந்துரை பட்டியலை வெளியிட்டது ஐசிசி!
ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. ...
-
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி இன்னிங்ஸ் மற்றும் 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்து 170 ரன்களில் ஆல் அவுட்; நிதானம் காட்டும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BANW vs AUSW: வங்கதேசத்தை பந்தாடி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47