Abhijeet tomar
பந்துவீச்சில் மாயாஜாலம் நிகழ்த்திய வருண் சக்ரவர்த்தி - வைரலாகும் காணொளி!
இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் அபீஜித் தோமர் சதமடித்து அசத்தியதுடன் 111 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் மஹிபால் லாம்ரோர் 60 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அடுத்து களமிறங்கிய வீரர்களில் கார்த்திக் சர்மா 35 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளயும் இழந்து 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Related Cricket News on Abhijeet tomar
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ராஜஸ்தானிடம் தோல்வியடைந்து காலிறுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது தமிழ்நாடு!
விஜய் ஹசாரே கோப்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான காலிறுதி சுற்றுக்கு முந்தைய ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2023: ராஜஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது ஹரியானா!
ராஜஸ்தான் அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை இறுதிப்போட்டியில் ஹரியானா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24