பந்துவீச்சில் மாயாஜாலம் நிகழ்த்திய வருண் சக்ரவர்த்தி - வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான விஜய ஹசாரே கோப்பை போட்டியில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் அபீஜித் தோமர் சதமடித்து அசத்தியதுடன் 111 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் மஹிபால் லாம்ரோர் 60 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அடுத்து களமிறங்கிய வீரர்களில் கார்த்திக் சர்மா 35 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளயும் இழந்து 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Trending
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தமிழ்நாடு அணியில் துஷார் ரஹேஜா மற்றும் பூபது குமார் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்தி வந்த ஜெகதீசன் 65 ரன்களுக்கும், பாபா இந்திரஜித் 37 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்த நிலையில், இறுதிவரை போராடிய விஜய் சங்கரும் 49 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதனால் தாமிழ்நாடு அணி 47.1 ஓவர்களில் 248 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ராஜஸ்தான் அணி தரப்பில் அமன் சிங் 3 விக்கெட்டுகளையும், அன்கித் சௌத்ரீ மற்றும் அஜய் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ராஜஸ்தான் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் தமிழ்நாடு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறமுடியாமல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
Spinning a web
Varun Chakaravarthy led Tamil Nadu's bowling charge with a fantastic -wicket haul against Rajasthan
Watch all his wickets #VijayHazareTrophy | @IDFCFIRSTBank
Scorecard https://t.co/pSVoNE63b2 pic.twitter.com/Lw3Jgrw0ar— BCCI Domestic (@BCCIdomestic) January 9, 2025Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் இப்போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வியைத் தழுவினாலும் நட்சத்திர வீரர் வருண் சக்ரவர்த்தி மீண்டும் ஒருமுறை தனது பந்துவீச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதன்படி இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 9 ஓவர்களில் 52 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து வருண் சக்ரவர்த்தி விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now