சோயப் மாலிக்கின் பிபிஎல் ஒப்பந்தம் ரத்து; வங்கதேச கிரிக்கெட்வாரியம் நடவடிக்கை!
பாகிஸ்தான் அணியின் சோயப் மாலிக் வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சந்தேகங்கள் எழுந்த நிலையில் அவருடை ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக். இவர் தற்போது வங்கதேசத்தின் டி20 லீக் தொடரான பிபிஎல் தொடரில் ஃபார்ச்சூன் பாரிஷால் அணிக்காக விளையாடி வருகிறார். இதில் ஃபார்ச்சூன் பாரிஷால் - குல்னா டைகர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் விளையாடிய ஃபார்ச்சூன் பாரிஷால் அணி 187 ரன்கள் குவித்தது.
அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய குல்னா டைகர்ஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18 ஓவர்களிலியே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஃபார்ச்சூன் பாரிஷால் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியின் போது ஃபார்ச்சூன் அணி தரப்பில் பந்துவீசிய சோயப் மாலிக் ஒரே ஓவரில் 3 நோ-பால்களை வீசியது பெரும் சர்ச்சையாக மாறியது.
Trending
ஏனெனில் சுழற்பந்துவீச்சாளரான சோயப் மாலிக் ஒரே ஓவரில் மூன்று நோ-பால்களை வீசுவது என்பது அரிதான ஒன்றாக பார்க்கப்பட்டது. இதனால் அவர் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டாரா என்ற சந்தேகமும் எழுந்தது. இந்நிலையில் சோயப் மாலிக்கின் பிபிஎல் ஒப்பந்தம் நிறுத்தப்படுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.
Shoaib Malik’s Bangladesh Premier League contract terminated on suspicion of "fixing" #BPL2024 #Pakistan #ShoaibMalik #Bangladesh #CricketTwitter pic.twitter.com/XmcXQgWIgG
— CRICKETNMORE (@cricketnmore) January 26, 2024
இதுகுறித்து வெளியான தகவலின் படி, சோயப் மாலிக் ஒரே ஓவரில் மூன்று நோ-பால்களை வீசியது அவர் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதனால் பங்களதேஷ் பிரீமியர் லீக் தொடரிலிருந்து சோயப் மாலிக்கின் ஒப்பந்தம் ரத்துசெய்யப்படுகிறது. மேலும் அவர் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டாரா என்பதை கண்டறிய விசாரணையும் மேற்கொள்ளப்படவுள்ளது என கூறப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now