
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக செயல்பட்டு வந்த நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே, ஒளிபரப்பு உரிமையாளருடனான கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்ட அவர் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன், மூன்றாவது முறையாக அப்பதியில் நீடிக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஐசிசியின் புதிய தலைவர் பதவிக்கான விண்ணப்பங்களை ஐசிசி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை ஐசிசியின் புதிய தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்படும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வரலாற்றில் மிக இளம் வயதில் தலைவராக நியமிக்கப்படும் முதல் நபர் எனும் பெருமையைப் பெறவுள்ளார்.
மேற்கொண்டு சர்வதேச கிரிக்கெட்டின் இரண்டு முன்னணி அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களிடம் இருந்தும் ஜெய் ஷாவை தலைவராக நியமிக்கப்ப பரிந்துரை செய்யபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்பதவிக்கு ஜெய் ஷா தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அவர் குறைந்தது மூன்று ஆண்டுகள் ஐசிசி தலைவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.