Glenn maxwell injury
பிபிஎல் 2024-25: மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் நியமனம்!
ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் பிக் பேஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக பெரும்பாலான ஆஸ்திரேலிய வீரர்கள் தயாராகி வருகின்றனர். இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் சில காரணங்களால் கடந்தண்டு இறுதியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்ட்ன் பதவியில் இருந்து விலகினார்.
மேற்கொண்டு சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின் கிளென் மேக்ஸ்வெல் காயமடைந்து போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். இதனால் நடப்பு சீசன் பிபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்கமாட்டார் என்ற தகவல்கள் வெளியாகின. இதனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்த கேள்விகள் அதிகரித்தன. இந்நிலியில் நடப்பு சீசன் பிபிஎல் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Glenn maxwell injury
-
பிபிஎல் 2024: காயம் காரணமாக மேக்ஸ்வெல் பங்கேற்பதில் சந்தேகம்?
காயம் காரணமாக எதிர்வரும் பிக் பேஷ் லீக் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து போட்டியிலிருந்து விலகிய கிளென் மேக்ஸ்வெல்!
கோல்ஃப் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியிலிருந்து விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24