Jasprit bumrah test ranking
டெஸ்ட் தரவரிசையில் முதலிடம்; சாதனை படைத்த ஜஸ்ப்ரித் பும்ரா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்துமுடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியளை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 15 (முதல் டெஸ்ட் -06, இரண்டாவது டெஸ்ட் -09)விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஜஸ்ப்ரித் பும்ரா 3 இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் படித்துள்ளார்.
Related Cricket News on Jasprit bumrah test ranking
-
டெஸ்ட் தரவரிசையில் அஸ்வினை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்தார் ஜஸ்ப்ரித் பும்ரா!
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47