டெஸ்ட் தரவரிசையில் அஸ்வினை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்தார் ஜஸ்ப்ரித் பும்ரா!
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இதையடுத்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன, 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்துள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது.
Trending
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியளை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஜஸ்ப்ரித் பும்ரா 3 இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் படித்துள்ளார்.
அதேபோல் முதல் இடத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு இடங்கள் சரிந்து 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேபோல் இரண்டாவது போட்டியிலிருந்து விலகிய இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா இரண்டு இடங்கள் சரிந்து 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் இப்பட்டியளின் முதல் 5 இடங்களில் இரண்டு இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
An All Format Great Already!#INDvENG #India #TeamIndia #TestCricket #JaspritBumrah pic.twitter.com/FmoGZQaiW3
— CRICKETNMORE (@cricketnmore) February 7, 2024
அதேபோல் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் கேன் வில்லியம்சன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அதேசமயம் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் இடத்தையும், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இப்பட்டியளின் டாப் 10 வரிசையில் இந்திய வீரர் விராட் கோலி மட்டுமே 7ஆம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் ஆஸ்வின் ஆகியோர் தொடர்ந்து முதலிரண்டு இடங்களில் நீடித்து வருகின்றனர். அதேபோல் இங்கிலாந்து தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அக்ஸர் படேல் ஒரு இடம் முன்னேறி 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now