Liam livingstone
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து வீரர் காயம்!
இங்கிலாந்துடனான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இஷான் கிஷன் அடித்த ஷாட்டை கேட்ச் பிடிக்கச் சென்றபோது இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டனுக்கு சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ஓய்வறைக்குச் சென்ற லிவிங்ஸ்டன் மீண்டும் ஃபீல்டிங் செய்ய வரவில்லை.
லிவிங்ஸ்டனுக்கு ஏற்பட்ட காயத்தின் தீவிரம் குறித்து அடுத்த 24 மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. பயிற்சி ஆட்டத்தில் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த லிவிங்ஸ்டன், பந்துவீச்சில் 1 விக்கெட் எடுத்தார்.
Related Cricket News on Liam livingstone
-
ஐசிசி டி20 தரவரிசை: டாப் 10-ல் நுழைந்த ரிஸ்வான்; அபார வளர்ச்சியில் லிவிங்ஸ்டோன்!
ஐசிசி டி20 தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 7ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
ENG vs PAK, 2nd T20I: தோல்விக்கு பழி தீர்த்த இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான 2ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. ...
-
ENG vs PAK, 2nd T20I: பட்லர் அதிரடியால் பாகிஸ்தானுக்கு 201 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs PAK, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று லீட்ஸில் நடைபெறுகிறது. ...
-
ENG vs PAK: லிவிங்ஸ்டோன் அபார சதம்; பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24