
ICC T20I Rankings: Rizwan, Livingstone make big gains (Image Source: Google)
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் சரவ்தேச கிரிக்கெட் கவுன்சில் டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 4 இடங்கள் முன்னேறி 7ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் டாப் 10ல் ரிஸ்வான் நுழைந்துள்ளார். அதேசமயம் இத்தொடரில் சதமடித்து அசத்திய இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன் 144 இடங்கள் முன்னேறி 26 ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.