Most sixes cwc 2023
ஐசிசி உலகக்கோப்பை 2023: அதிக ரன், விக்கெட்டுகள், சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியல்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் மீண்டும் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக (1987, 1999, 2003, 2007, 2015) உலகக் கோப்பையைக் கைப்பற்றி, வரலாற்றை மாற்றி எழுதியது. முன்னதாக, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்களை எடுத்தது இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 54 ரன்களும், கே.எல்.ராகுலும் 66 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அவ்வணியில் டிராவிஸ் ஹெட் 137 ரன்களும், லபுசேன் 58* ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்தாலும், இந்த தொடரில் சிறப்பாகவே விளையாடி, ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்து வந்தது. இதன்மூலம் இந்திய வீரர்கள்தான் நடப்புத் தொடரில் பல மகத்தான சாதனைகளைப் படைத்துள்ளனர். அதன்படிநடப்பு உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அவர், 3 சதம், 6 அரைசதங்களுடன் 765 ரன்கள் எடுத்துள்ளார். தவிர, ஓர் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களிலும் இவரே முதலிடத்தில் உள்ளார்.
Related Cricket News on Most sixes cwc 2023
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24