Narendra mod stadium
வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்; அடிக்கல் நாட்டும் பிரதமர்!
வாரணாசி ஆன்மீக வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ள நிலையில், தற்போது இது மாநிலத்தின் முக்கியமான விளையாட்டு மையமாக உருவாக உள்ளது. வரும் 23 ஆம் தேதி வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் ரூ.450 கோடி செலவில் கட்டப்படும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
கிட்டத்தட்ட 31 ஏக்கர் பரப்பரளவில் கட்டப்படும் இந்த மைதானம் 30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது. டிஸ்ப்ளே ஸ்கோர்போர்டு, ஃப்ளட் லைட்கள், கார்ப்பரேட் பாக்ஸ்கள், பயிற்சிப் பகுதிகள், விஐபி ஓய்வறைகள், செய்தியாளர் சந்திப்பு மண்டலம் மற்றும் அலுவலகப் பகுதிகள் என்று அனைத்து வசதிகளுடன் கூடியதாக இந்த மைதானம் கட்டப்படவுள்ளது.
Related Cricket News on Narendra mod stadium
-
ஐபிஎல் 2022: அரைமணி நேரம் தாமதமாகும் இறுதிப்போட்டி!
15ஆவது ஐபிஎல் சீசனின் நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக நடப்பு சீசனுக்கான இறுதிப் போட்டி 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரன்வீர் சிங் பங்கேற்கின்றனர். ...
-
IND vs WI: ஒருநாள் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை!
கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் பார்வையாளர்களின்றி நடைபெறவுள்ளது. ...
-
'நாங்கள் இனி அண்ணன் தம்பி' - பிரதமருக்கு நன்றி கூறிய ரஸ்ஸல்
ஜமைக்காவிற்கு கரோனா தடுப்பு மருந்தை வழங்கிய இந்தியாவிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் நன்றி தெரிவித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47