
இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை வங்கதேச அணி 2-1 என வென்றது. அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவருகிறது.
ஒருநாள் தொடரின்போது கை கட்டைவிரலில் காயமடைந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் டெஸ்ட்டில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக அபிமன்யூ ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டார். கேஎல் ராகுல் முதல் டெஸ்ட்டில் கேப்டன்சி செய்தார். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி , ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர். ஆனால் காயம் காரணமாக அவர்கள் ஆடாததால் ஜெய்தேவ் உனாத்கத், நவ்தீப் சைனி, சௌரப் குமார் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் இவர்களுக்கு முதல் டெஸ்ட்டில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை.