Ravi shastri
‘இறுதி போட்டிக்கு இந்திய அணி தயார் நிலையில் உள்ளது’ - ரவி சாஸ்திரி, விராட் கோலி பேட்டி!
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 18 ஆம் தேதி இங்கிலாந்து சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் இன்று இங்கிலாந்து புறப்பட்டுள்ளனர். அதற்கு முன்னதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் முதலில் பேசிய ரவி சாஸ்திரி, “முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்கு இந்திய தகுதி பெற்றுள்ளது மகிழ்ச்சியான விஷயம். இத்தொடர் எங்களுக்கு மிகப்பெரியது இல்லை, அதுக்கும் மேல. டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் கடினமாக இருக்கும். இதிலும் நமது அணி சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டி வரை வந்துள்ளது. வெறும் மூன்று மாதங்கள் இத்தொடர் நடைபெறவில்லை. கிட்டதட்ட மூன்று வருடங்களாக நடைபெற்று வருகிறது. இறுதிப் போட்டிக்காக இந்திய அணி தயார் நிலையில் உள்ளது” எனத் தெரிவித்தார். அடுத்துப் பேசிய விராட் கோலி, “ரவி சாஸ்திரி சொன்னதை ஒப்புக்கொள்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் கடினமானது தான். டெஸ்ட் விளையாடுவது பெருமைக்குரிய விஷயம். கடந்த 6 வருடங்களாக இந்திய டெஸ்ட் அணி நிறையை மாற்றங்களைக் கண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. காலநிலை நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் நியூசிலாந்து அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என நாங்கள் நினைக்கவில்லை. அப்படி நினைத்து அங்கு செல்ல மாட்டோம். இருவருக்கும் சமமான போட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு மணி நேரமும் சிறப்பாக விளையாடினால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். அதற்கான ஆற்றல் எங்களிடம் உள்ளது என தெரிவித்தார்.
Related Cricket News on Ravi shastri
-
இந்திய அணியில் கேப்டனை விட பயிற்சியாளருக்கு தான் மதிப்பு அதிகம் - மாண்டி பனேசர்
இந்திய அணியில் கேப்டன் விராட் கோலியை விட, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி க்கு தான் அதிக மதுப்பும், மரியாதையும் உள்ளதென இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47