South africa tour of australia
நோர்ட்ஜேவை தாக்கிய ஸ்பைடர் கேம்; வைரல் காணொளி!
மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டில் வாட்டிவதைத்த வெயிலோடு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு ஓரளவு குடைச்சல் கொடுத்தவர், தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே தான்.
மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் தொடர்ச்சியாக பந்து வீசி அச்சுறுத்தினார். இந்நிலையில் ஆட்டத்தின் 47ஆவது ஓவரின் போது, பீல்டிங் பகுதியில் நடந்து சென்ற அவர் மீது எதிர்பாராத விதமாக மைதானத்தில் அந்தரத்தில் சுழன்று வரும் ஸ்பைடர் கேமரா தாக்கியது. இடது தோள்பட்டையில் கேமரா பலமாக இடித்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
Related Cricket News on South africa tour of australia
-
Boxing Day Test: இரட்டை சதமடித்து வார்னர் அசத்தல்; ஆதிக்கம் செலுத்தும் ஆஸி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 197 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து சாதனை நிகழ்த்திய டேவிட் வார்னர்!
100ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆஸ்திரேலிய வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் படைத்துள்ளார். ...
-
Boxing Day Test: சீட்டுக்கட்டாய் சரிந்த தென் ஆப்பிரிக்கா; க்ரீன் அபாரம்!
தென் ஆப்பிரிகாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்க, பாக்ஸிங் டே டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனக்கு போதிய ஆதரவு அளிக்கவில்லை - டேவிட் வார்னர்!
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தனக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனக்கு போதிய ஆதரவு அளிக்கவில்லை என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
வார்னர் பற்றி நல்லவிதமாக சொல்ல ஒன்று கூட இல்லை - ஃபாஃப் டூ பிளெசிஸ் தாக்கு!
ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஒரு அடாவடிக்காரர் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டூப்ளசிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47