The round
துலீப் கோப்பை 2024: முதல் சுற்றில் இருந்து முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ரவீந்திர ஜடேஜா விலகல்!
இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் அனைவரும் நிச்சயமாக உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதில் டீம் ஏ அணியின் கேப்டனாக ஷுப்மன் கில்லும், டீம் பி அணியின் கேப்டனாக அபிமன்யூ ஈஸ்வரும், டீம் சி அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டும், டீம் டி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்ம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Related Cricket News on The round
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24