Advertisement

Birmingham Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான தொடக்கத்தை பெற்றிருந்த இந்திய வீரர் கருண் நாயர் 31 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூலை 02) நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கேஎல் ராகுல் 2 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்த கருண் நாயர் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இதில் இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதிலும் குறிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார். 

Also Read: LIVE Cricket Score

அதன்பின் பொறுப்புடன் விளையாடிய கருண் நாயர் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தர். இதன் காரணமாக இந்திய அணி முதல்நாள் உணவு இடைவேளையின் போது 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்களை சேர்த்துள்ளது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 62 ரன்களுடனும், கேப்டன் ஷுப்மன் கில் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோர் தல ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News