PAK vs ENG, 2nd Test: இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் பாகிஸ்தான் அணி!

Updated: Thu, Oct 17 2024 13:01 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதையடுத்து பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணியானது காம்ரன் குலாம் மற்றும் சைம் அயூப் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 366 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட் ஆனது. 

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 118 ரன்களையும், சைம் அயூப் 77 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பென் டக்கெட் சதமடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 114 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்களை மட்டுமே சேர்த்தது.  இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஜேமி ஸ்மித் 12 ரன்களுடனும், பிரைடன் கார்ஸ் 2 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஜேமி ஸ்மித் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து பிரைடன் கார்ஸ் 4 ரன்னிலும், மேத்யூஸ் பாட்ஸ் 6 ரன்னிலும், ஷோயப் பஷீர் 9 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். 

இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 291 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் ஜேக் லீச் 24 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சஜித் கான் 7 விக்கெட்டுகளையும், நோமன் அலி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 75 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் அணியானது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. 

Also Read: Funding To Save Test Cricket

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அப்துல்லா ஷஃபிக் 4 ரன்களிலும், சைம் அயூப் 22 ரன்னிலும், கேப்டன் ஷான் மசூத் 11ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்களைச் சேர்த்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை