வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. தொடக்க ஜோடி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் மீண்டும் ஒருமுறை சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் இருந்த இந்த ஜோடி, பின்னர் வந்து ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை பறிகொடுக்க, முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தது.

Advertisement

கடந்த போட்டியில் அறிமுகமான ஜெய்ஸ்வால் இந்த போட்டியில் அரைசதம் அடித்தார். அதை சதமாக மாற்றி பல்வேறு சாதனைகளை மீண்டும் படைப்பார் என்று எதிர்பார்த்து இருந்தபோது, துரதிஷ்டவசமாக 57 ரன்களுக்கு ஜெசன் ஹோல்டர் பந்தில் அவுட் ஆனார். அடுத்ததாக உள்ளே வந்த ஷுப்மன் கில் 10 ரன்கள் மட்டுமே அடித்து சொதப்பலான முறையில் அவுட் ஆனார். மறுபக்கம் ஓப்பனிங் இறங்கி அரைசதம் அடித்திருந்த ரோகித் சர்மா 80 ரன்கள் இருந்தபோது போல்ட் ஆனார். 

அடுத்து உள்ளே வந்த ரஹானே வெறும் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 182 ரன்களுக்கு நான்கு விக்கெடுகளை இழந்து சற்று தடுமாற்றம் கண்டது. உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் இருந்த இந்திய அணி, அதன் பிறகு வந்து தேநீர் இடைவேளைக்குள் நான்கு விக்கட்டுகளை இழந்து சொதப்பியது.தேநீர் இடைவேளைக்கு பின் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஜடேஜா இருவரும் நாள் முடிவில் வேறு விக்கெடுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர். 

5 ஆவது விக்கெட்டுக்கு 106 பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இதில் விராட் கோலி 87 ரன்களுடனும், ஜடேஜா 36 ரன்கள் உடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இதன்மூலம் முதல் நாள் முடிவில் இந்திய அணி 288 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமார் ரோச், ஷனான் கேப்ரில், ஜொமல் வாரிகன், ஜேசன் ஹோல்டர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News