England Playing XI: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

Advertisement

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜூலை 2ஆம் தேதி பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது. 

Advertisement

இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளதன் காரணமாக இப்போட்டியிலும் வெற்றிபெறும் உத்வேகத்துடன் களமிறங்கவுள்ளது. அதேசமயம் மறுபக்கம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் இப்போட்டியில் வெற்றி பெற்று காம்பேக் கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர்களே இடம்பிடித்துள்ளனர். முன்னதாக இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இடம்பிடித்திருந்தார். மேலும் கடந்த 2021ஆம் ஆண்டிற்கு பிறகு ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். 

இதன் காரணமாக இப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் நிச்சயம் ஆர்ச்சர் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் தற்சமயம் அவருக்கு இப்போட்டியில் ஓய்வளிக்கப்பட்டு முந்தைய போட்டிகளில் விளையாடிய வீரர்களே பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. முன்னதாக குடும்ப சூழ்நிலை காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் பயிற்சியை தவிர்த்து வீடு திரும்பியதாக தகவல் வெளியானது. 

இருப்பினும் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இங்கிலாந்து அணியுடன் இணைந்து விடுவார் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறாதது சற்று ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து அணிக்காக இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஜோஃப்ரா ஆர்ச்சர் அதில் 42 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Also Read: LIVE Cricket Score

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங், ஷோயிப் பஷீர்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News