ஒருவேளை ரோஹித் கேப்டனானால், இவர்களின் கதை அவ்வளவு தான்..!

Updated: Tue, Jun 29 2021 14:08 IST
3-players-who-can-lose-their-place-as-soon-as-rohit-sharma-becomes-captain (Image Source: Google)

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் படுதோல்வியைச் சந்தித்து கோப்பையை இழந்தது. 

இதனால் விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் பூதாகரமாக வெடித்துள்ளது. அதிலும் கோலியை கேப்டன் பதவிலிருந்து நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வெண்டுமென்ற கருத்து சமூக வலைதளங்களில் அவ்வபோது வைரலாகி வருகிறது. 

ஒரு வேளை ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டால், நிச்சயம் இந்திய அணியில் உள்ள சில வீரர்கள் தங்கள் இடத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. அப்படி ரோஹித் கேப்டனானால் அணியிலிருந்து கழற்றி விட வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் காண்போம்..!

1. வாஷிங்டன் சுந்தர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர். இவர் விராட் கோலியின் விருப்பமான வீரர்களில் ஒருவர். வாஷிங்டன் சுந்தரும் விராட் கோலியுடன் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகின்றனர்.

இதன் காரணமாக வாஷிங்டன் சுந்தர் இந்தியாவுக்காக டி 20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடி வருகிறார். ஒருவேளை ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக மாறினால், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக குர்னால் பாண்டியா அல்லது ஜெயந்த் யாதவ்விற்கு அவர் முக்கியத்துவம் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

2.நவ்தீப் சைனி

தற்போதுள்ள இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளராக இருப்பவர் நவ்தீப் சைனி. இவர் இந்தியாவுக்காக டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகியா மூன்று வடிவங்களிலும் விளையாடி வருகிறார். இவர் அணியில் இடம்பெற விராட் கோலியும் முக்கிய காரணம் என்றால் அது மறுப்பதற்கில்லை. 

ஏனெனில் இவரும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடும் வீரர் என்பதால். ஆனால் சமீப காலமாக சைனியின் பந்துவீச்சு திறன் இந்திய அணிக்கு பலனளிப்பதில்லை என்ற விமர்சனங்கள் வருகின்றனர். 

அதனால் ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக மாறியதும், சைனி இடம் கேள்விகுறிதான். ஆனால் இவருக்கு மாற்று வீரராக சேதன் சக்காரியா அல்லது நடராஜன் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே கூறப்படுகிறது.

3. ரிஷப் பந்த்

இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த். இவர் அவ்வபோது தனது அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்து அணிக்கு உதவினாலும், பெரும்பாலான நேரங்களில் இவரது ஆட்டம் இந்திய அணிக்கு கைக்கொடுப்பதில்லை என்பதே நிதர்சனம். 

அதனால் இவருக்கு மாற்றாக இளம் வீரர் இஷான் கிஷானிற்கு இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் வாய்ப்பு வழங்கப்படும் என பரவலாக கருத்து நிலவிவருகிறது. 

ரோஹித் இந்திய அணியை வழிநடத்தும் பட்சத்தில், அக்கருத்தானது உறுதியாகும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் பொழுது மேலே குறிப்பிட்டுள்ள இந்த மூன்று வீரர்களில் கதையும் முடிவுக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை