WI vs AUS, 3rd Test: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.

Advertisement

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 48 ரன்களையும், கேமரூன் க்ரீன் 46 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Advertisement

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிமுதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை பிராண்டன் கிங் 8 ரன்களுடனும், கேப்டன் ரோஸ்டன் சேஸ் 3 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் பிராண்டன் கிங் 14 ரன்களுக்கும், ரோஸ்டன் சேஸ் 18 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மைக்கேல் லூயிஸும் 7 ரனக்ளில் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜான் காம்பெல் மற்றும் ஷாய் ஹோப் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் ஜான் காம்பெல் 36 ரன்களுக்கும், ஷாய் ஹோப் 18 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜஸ்டின் க்ரீவ்ஸ் 18 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் கேப்டன் பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் 80 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு மீண்டும் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் சாம் கொன்ஸ்டாஸ் ரன்கள் ஏதுமின்றியும், உஸ்மான் கவாஜா 14 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேமரூன் க்ரீன் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கேமரூன் க்ரீன் 42 ரன்களுடனும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும், ஷமார் ஜோசப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 181 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News