ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன. 

Advertisement

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் அபாரமான சதத்தின் மூலம் 445 ரன்களைக் குவித்து அசத்தியது.

Advertisement

இதில் அதிகபட்சாமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களையும் சேர்த்தனர்.  இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா ஆறு விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு இம்முறையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பவுண்டரியும் இன்னிங்ஸைத் தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்த பந்திலேயே விக்கெட்டையும் இழந்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து களமிறங்கிய ஷுப்மன் கில்லும் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் மிட்செல் மார்ஷின் அபாரமான கேட்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரும் சொற்ப ரன்களில்விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இந்திய அணி 44 ரன்க்ளில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் கேஎல் ராகுலுடன் இணைந்த ரோஹித் சர்மா அணியின் விக்கெட் இழப்பை தடுக்கும் முயற்சியில் இறங்கினார். மறுபுறம் கேஎல் ராகுல் அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார். 

ஆனால் இன்றைய நாளில் ஆட்டம் தொடங்கியது முதலே மழை காரணமாக போட்டி தடைபட்டது. அதேசமயம் கிடைத்த நேரங்களிலும் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் கடைசி செஷனின் போதும் மழை குறுக்கிட்டத்தால் இன்றைய நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் கேஎல் ராகுல் 33 ரன்களுடனும், ரோஹித் சர்மா ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News