ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன. 

Advertisement

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைக் குவித்து அசத்தியது.

Advertisement

இதில் அதிகபட்சாமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களையும் சேர்த்தனர்.  இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு இம்முறையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், ஷுப்மன் கில் ஒரு ரன்னிலும், விராட் கோலி 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்தும் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் தொடர் மழை காரணமாக மூன்றாம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிவடைந்ததாக அறிவிக்கப்பது. இதனால் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறியது. இதனையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை கேஎல் ராகுல் 33 ரன்களுடனும், ரோஹித் சர்மா ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா 10 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ராகுலுடன் இணைந்த ரவீந்திர ஜடேஜா பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மறுமுனையில் ராகுல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 8 பவுண்டரிகளுடன் 84 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிதீஷ் ரெட்டி 16 ரன்னிலும், முகமது சிராஜ் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அரைசதம் கடந்து விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா 77 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் இணை அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன், இந்திய அணி ஃபாலோ ஆன் ஆவதிலிருந்தும் தடுத்து நிறுத்தினர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதன்பின் போதிய வெளிச்சமின்மை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் முன் கூட்டியே முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இந்திய அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஆகஷ் தீப் 27 ரன்களுடனும், ஜஸ்பிரித் பும்ரா 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இன்னும் ஒருநாள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இப்போட்டியானது டிராவை நோக்கி நகர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News