ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைக் குவித்து அசத்தியது.
இதில் அதிகபட்சாமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், ஷுப்மன் கில் ஒரு ரன்னிலும், விராட் கோலி 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்தும் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய கேஎல் ராகுல் ஒரு பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய் ரோஹித் சர்மாவும் 10 ரன்களில் அட்டமிழ்ந்தார். பின்னர் ராகுலுடன் இணைந்த ரவீந்திர ஜடேஜா பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களையும் கடந்தனர். இதில் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 8 பவுண்டரிகளுடன் 84 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து நிதீஷ் ரெட்டி 16 ரன்னிலும், முகமது சிராஜ் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்த நிலையில், அரைசதம் கடந்திருந்த ஜடேஜவும் 77 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் இணை பொறுப்புடன் விளையாடியதுடன் கடைசி விக்கெட்டிற்கு 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை ஃபலோ ஆன் ஆவதிலிருந்து காப்பாற்றினர். இறுதியில் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆகாஷ் தீப் தனது விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 185 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்க இருந்த நிலையில் மழை குறுக்கிட்டத்தால் ஆட்டம் தடைப்பட்டது. இதனால் இப்போட்டியின் முடிவானது டிராவை நோக்கி நகர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.