இந்த தொடர் கடும் போராட்டமாக அமைந்தது - ராகுல் டிராவிட்!

Updated: Mon, Mar 13 2023 22:11 IST
4th Test: Found People Who Put In Special Performances Whenever Needed, Says Rahul Dravid (Image Source: Google)

இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, உஸ்மான் கவஜா(180) மற்றும் கேமரூன் கிரீன்(114) இருவரும் அபாரமாக சதம் விளாசினர். இதனால் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் அடித்தது.

அதை பின்தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு விராட் கோலி(186), ஷுப்மன் கில்(128) இருவரும் சதமடிக்க, முதல் இன்னிங்சில்  571 ரன்கள் அடித்து 91 ரன்கள் முன்னிலை வைத்தது. விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 1208 நாட்களுக்குப் பிறகு சதம் அடித்திருந்தார்.

அதன்பிறகு பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 4ஆம் நாள் விக்கெட் இழப்பின்றி 3 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து 5ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி முதல் விக்கெட்டை 14 ரன்களுக்கும் 2ஆவது விக்கெட்டை 153 ரன்களுக்கும் இழந்தது. தேநீர் இடைவெளிக்குப்பின்னும் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே ஆஸ்திரேலிய அணி இழந்திருந்தது.

நாள் முடிவடைய 15 ஓவர்கள் மீதமிருந்தபோது ஆட்டம் முடித்துக்கொள்ளலாம் என இரு அணி கேப்டன்களும் முடிவுக்கு வந்ததால், ஆட்டம் டிரா ஆனது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை கைப்பற்றியது.

இந்திய அணி தொடரை கைப்பற்றியபின் பேட்டியளித்த பிறகு ராகுல் டிராவிட் பேசுகையில், “இந்த தொடர் கடும் போராட்டமாக அமைந்தது. நிறைய சூழல்களில் ஆஸி அணியினர் அழுத்தத்தை கொடுத்தனர். அவற்றை சமாளித்து தொடரை கைப்பற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சீரியஸை செஞ்சுரியுடன் ஆரம்பித்தார் ரோகித், செஞ்சுரியுடன் முடித்தார் விராட். நடுவில் ஜடேஜா, அஸ்வின்,அக்சர், கில் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது. 

அவர்களின் உழைப்பிற்கு பலன்கிடைத்தது பெருமிதமாக இருக்கிறது. அடுத்ததாக ஒருநாள் தொடர் வரவுள்ளது. இதைவிட அது இன்னும் முக்கியமானது. ஆஸி அணியின் இன்னும் கடினமானவர்களாக ஒருநாள் தொடர்களில் இருப்பார்கள். சவால் மிக்கதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை