மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கொன்ஸ்டாஸ் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். 

Advertisement

இப்போட்டியில் 52 பந்துகளில் அரைசதம் கடந்த கொன்ஸ்டாஸ், 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவும் அரைசதம் கடந்த நிலையில் 57 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே - ஸ்டிவ் ஸ்மித் இணையும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

Advertisement

இதில் 72 ரன்களில் லபுஷாக்னே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ் ஆகியோர் சொற்ப ரன்களிலும், அலெக்ஸ் கேரி 31 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இதனால் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை குவித்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஸ்டீவ் ஸ்மித் 68 ரன்களுடனும், பாட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் தொடர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் இப்போட்டியில் அறிமுகமான சாம் கொன்ஸ்டாஸ் அரைசதம் கடந்ததுடன், உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் மற்ற பேட்டர்கள் தடுமாறிய நிலையில் சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன் 2 சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தினார். 

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக எந்தவொரு வீரரும் இவ்வாறு செயல்பட்டதை நான் பார்த்ததில்லை என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சிவப்பு-பந்து கிரிக்கெட் ஒருபுறம் இருக்க, மற்ற கிரிக்கெட் வடிவத்திலும் யாரும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக இப்படி விளையாடியதாக என்க்கு நினைவில்லை. மேலும் கொன்ஸ்டாஸ் தனக்கு உரித்தான முறையில் அதிரடியாக விளையாடி அசத்தினார்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

மேலும் அவர் அதிரடியாக விளையாடும் போது எனக்கு வீரேந்திர சேவாக்கை அதிகம் நினைவுபடுத்தினார். ஏனெனில் ஒவ்வொரு முறையும் வீரேந்திர சேவக் களமிறங்கும் போது அவர் அதிரடியாக விளையாடி ரசிகர்களை மகிழ்விப்பார். அதேபோல் கொன்ஸ்டாஸும் ஆஸ்திரேலியாவுக்காக நீண்ட நேரம் விளையாடினால், அதைச் சரியாகச் செய்வார் என நம்புகிறேன்” என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News