மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கொன்ஸ்டாஸ் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். 

Advertisement

இப்போட்டியில் 52 பந்துகளில் அரைசதம் கடந்த கொன்ஸ்டாஸ், 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவும் அரைசதம் கடந்த நிலையில் 57 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே - ஸ்டிவ் ஸ்மித் இணையும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

Advertisement

இதில் 72 ரன்களில் லபுஷாக்னே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ் ஆகியோர் சொற்ப ரன்களிலும், அலெக்ஸ் கேரி 31 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இதனால் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை குவித்துள்ளது. நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த ஸ்மித் 68 ரன்களுடனும், பாட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் இப்போட்டியில் கொன்ஸ்டாஸ் மற்றும் விராட் கோலி இடையேயான மோதலானது பெரும் பரபரப்பை கிளப்பியது. இப்போட்டியில் அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸை இந்திய வீரர் விராட் கோலி வேண்டுமென்றே இடித்தார். இதனால் இருவருக்கும் இடையே களத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் உஸ்மான் கவாஜா மற்றும் கள நடுவர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர். மேலும் களத்தில் இதுபோல் வீரர்களிடம் நடந்து கொள்வது ஐசிசி விதிமுறைகளுக்கு எதிரானதும் கூட.

 

இதன் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ஐசிசியின் அபராதம் விதித்துள்ளது. அதன்படி சாம் கொன்ஸ்டாஸை வேண்டுமென்றே இடித்த காரணத்திற்காக விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதித்ததுடன், அவருக்கு ஒரு டிமெரிட் புள்ளியையும் அபராதமாக ஐசிசி விதித்துள்ளது. மேலும் விராட் கோலி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக மேற்கொண்டு விசாரணைக்கு வரதேவையில்லை என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது. 

Advertisement

ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஸ்காட் போலண்ட்.

இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News