5th Test, Day 1: மீண்டும் சொதப்பிய டார் ஆர்டர்; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜனவரி 03) நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பந்துவீச அழைத்துள்ளது.
இப்போட்டிக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பிடிக்காததன் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகிய ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக பிரஷித் கிருஷ்ணா பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்றுள்ளார். மறுபக்கம் ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டு பியூ வெப்ஸ்டர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனால் இந்திய அணி 17 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அவர்களைத் தொடர்ந்து காளமிறங்கிய விராட் கோலியும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்திருக்கும் தருணம் இருந்த நிலையில் அதிர்ஷ்டத்தால் தப்பினார். பின்னர் ஷுப்மன் கில் விராட் கோலி இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், ஷுப்மன் கில் 20 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தர். இதனால் இந்திய அணி முதல்நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே 3 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் விராட் கோலி 12 ரன்களைச் சேர்த்து களத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட் மற்றும் நாதன் லையன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.