T20 WC 2024: ரசிகரிடம் மோதிய அசாம் கான்; வைரலாகும் காணொளி!

Updated: Fri, Jun 07 2024 00:30 IST
T20 WC 2024: ரசிகரிடம் மோதிய அசாம் கான்; வைரலாகும் காணொளி! (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் முகமது ரிச்வான், உஸ்மான் கான், ஃபகர் ஸமான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் இணைந்த கேப்டன் பாபர் ஆசாம் - ஷதாப் கான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் இருவரும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷதாப் கான் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரன்களுக்கும், கேப்டன் பாபர் ஆசாம் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். 

இறுதியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 23 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே சேர்த்தது. அமெரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய நோஸ்துஷ் கென்ஜிகே 3 விக்கெட்டுகளையும், சௌரவ் நேத்ரவால்கர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசாம் கான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அப்போது ஏமாற்றதுடன் பெவிலியன் திரும்பிய ஆசாம் கானை மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் கிண்டல் செய்த நிலையில், அந்த ரசிகரிடம் ஆசாம் கான் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் ஆசாம் கானின் இந்த செயல் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை